குறுந்தொகை 44

தலைவனும் தலைவியும் காதலிக்குறாங்க. வீட்டுல ஒத்துக்கல. அதனால வீட்டை விட்டு ஓடிப் போயிறாங்க. அந்தச் செய்தி தெரிய வந்ததும், தலைவியோட வளர்ப்புத் தாய் அவங்களைத் தேடிட்டுப் போறாங்க. கண்டே புடிக்க முடியல. அப்போ ஒருகட்டத்துல, அந்த வளர்ப்புத் தாய் சொல்றாங்க, "நடந்து நடந்து காலே வலிக்குது. தேடி தேடிப் பாத்து, கண்ணு தன்னோட ஒளியை இழந்துடுச்சு. ராத்திரி வானத்துல இருக்குற நட்சத்திரங்களை விட, இந்த உலகத்துல மத்தவங்க தான் அதிகமா இருக்காங்க." தான் தேடிப் போற தலைவன் … Continue reading குறுந்தொகை 44

அன்புள்ள நற்றிணையே ❤️

Only one more verse left to complete Natrinai. Feeling a bit emotional. நற்றிணை முடிய போகுதேன்னு கொஞ்சம் கவலையாவே இருக்கு. ஜூன் 2020ல SangamLit கேக்க ஆரம்பிச்சேன். இப்போ ரெண்டு வருசம் ஆகிடுச்சு. எப்படியோ ஆமை வேகத்துல நானூறு பாடல்களையும்  கேட்டு முடிச்சிட்டேன்னு சந்தோசமா இருந்தாலும், ஐய்யயோ முடியப் போகுதேன்னு வருத்தமாவும் இருக்கு. ஒரு புத்தகம் படிக்குற மாதிரி, தினமும் ஒரு கதை, ஒரு இயற்கை காட்சின்னு மனசை அப்படியே லேசா, சுகமா … Continue reading அன்புள்ள நற்றிணையே ❤️

Grief of Mother’s Day

For past few years, I was in the category of 'the hopeless, the mourning, the woman whose heart desires to be a mom'. கூடப் படிச்சவங்க, ஃபிரண்ட்ஸ் எல்லாரும் அன்னையர் தினத்துக்கு ஸ்டேட்டஸ் வைக்கும்போது, 'நம்ம எப்போ அம்மாவாகப் போறோம்'னு ஏங்கிப் போய் உக்காந்துருக்கேன். இந்தப் பதிவை படிக்கும்போது, பழைய நாட்கள் எல்லாம் கண்ணுக்கு முன்னாடி வந்துட்டுப் போகுது. //Honor the joy and 'grief of Mother's … Continue reading Grief of Mother’s Day

அம்மாவாகிய நான்!

அம்மாக்களுக்குக் குடுக்குற ஹைப்(hype) எல்லாம் ரொம்ப ஓவர்-ன்னு முன்னாடி நினைச்சிட்டு இருப்பேன். ஆனா இப்போ தான் புரியுது, அது எவ்வளவு 'ஒர்த்'-ன்னு. அம்மாவா இருக்குறது அவ்வளவு சாதாரண காரியம் கெடையாது தான். எனக்கு என் பையன் இளவெயில் பொறந்து ஒரு மாசத்துக்குள்ளயே, 'இந்த வேலையை நான் இவ்வளவு பொறுமையா பண்றதுக்காக, எனக்கு யாராச்சும் ஒரு 'அவார்ட்' குடுத்தா பரவாயில்லையே'ன்னு தோணிச்சு. அந்தளவுக்கு நொந்துட்டேன். யப்பா முடியல. என்னை மாதிரியே இராப்பகலா உழைச்சிட்டு இருக்குற புது அம்மாக்களுக்கும், பழைய … Continue reading அம்மாவாகிய நான்!

புத்தகங்கள் 2021

எல்லா வருசமும் பத்துப் புத்தகம் படிக்கணும்னு நினைப்பேன். ஆனா ஒரு வருசமும் அது நடந்ததே இல்ல. இந்த வருசம் தான் முதல் தடவையா பத்துப் புத்தகம் முழுசா படிச்சி முடிச்சிருக்கேன். நான் படிச்ச புத்தகங்கள் இது தான்: 1. 'பிறகு' by பூமணி2. 'அம்பேத்கரும் சாதி ஒழிப்பும்' by கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலா3. 'அவஸ்தை' by யூ.ஆர். அனந்தமூர்த்தி4. 'சூல்' by சோ. தர்மன்5. 'அதீதத்தின் ருசி' by மனுஷ்யபுத்திரன்6. 'வால்காவிலிருந்து கங்கை வரை' by ராகுல சாங்கிருத்தியாயன்7. … Continue reading புத்தகங்கள் 2021

Dopamine Detox Challenge

காலைல எந்திரிச்சு முதல் ஒரு மணி நேரத்துக்கு செல்போன் உபயோகிக்கக் கூடாது. No mobile phone for first one hour of your day 📵 Anyone wants to try this challenge with me ? Timeline: One week for now. ஒரு வாரம் ரொம்பக் கஷ்டம்ன்னு நினைக்குறவங்க, ஒரு நாள் மட்டுமாச்சும் முயற்சிப் பண்ணி பாக்கலாம். Just give it a try and feel the difference 😊🎊 … Continue reading Dopamine Detox Challenge

ஆம்பளப் புள்ளையா? பொம்பளப் புள்ளையா?

சாதியைக் கண்டுபுடிக்க ஆயிரம் வழிகள் வச்சிருக்குற மாதிரி, வயித்துக்குள்ள இருக்குறது ஆம்பளப் புள்ளையா பொம்பளப் புள்ளையான்னு கண்டுபுடிக்கவும் ஆயிரம் வழிகள் வச்சிருப்பாங்க போல. ஹார்ட் பீட் எவ்ளோ? இவ்ளோவா? அவ்ளோவா?Placenta, Posteriorஆ? Anteriorஆ?வயிறு சின்னதா இருக்கா? பெருசா இருக்கா?கொஞ்சம் கீழ எறங்கி இருக்கா? மேல ஏறி இருக்கா? இப்படி ஆளுக்கு ஒரு வழிமுறையை வச்சிக்கிட்டு, நம்மளப் போட்டு ஆராய்ச்சிப் பண்றது தான் இவங்களோட முக்கிய வேலையே. என் வயித்துக்குள்ள பாப்பா வந்ததுல இருந்து, "பேபி.. பேபி.."ன்னு கூப்ட்டு … Continue reading ஆம்பளப் புள்ளையா? பொம்பளப் புள்ளையா?

தூக்கமின்மை – Part 2

#5: Cognitive association + Wind-down routineகாக்னிடிவ் அஸோஸியேசன்-ங்கிற சொல்லை நீங்க இதுக்கு முன்னாடி கேள்விப்பட்டுருக்கீங்களான்னு தெரியல. நான் இந்த 'Headspace - Wake Up' சீரிஸ் மூலமா தான் தெரிஞ்சிக்கிட்டேன். "மூளை ஓர் அஸோஸியேட்டிவ் மெசின்"னு சொல்லுவாங்க. அதாவது, மூளைங்கிறது, ஒரு விசயத்தையும் இன்னொரு விசயத்தையும் தொடர்பு படுத்திப் பாக்கக் கூடிய ஓர் இயந்திரம். 'ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும். கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்.' இந்தப் பாட்டுல சொல்லிருக்குற அதே … Continue reading தூக்கமின்மை – Part 2

தூக்கமின்மை

"தூக்கமே வர மாட்டேங்கிது"ன்னு ராத்திரி எந்திரிச்சு உக்காந்து அழுதுருக்கீங்களா? நான் அழுதுருக்கேன். நெறைய நாள். அதுவும் குறிப்பா இந்த லாக்டவுனுக்கு அப்புறம் தான். காரணம், எனக்கு அப்போயிருந்த அதிகப்படியான ஆஃபீஸ் வேலை. அதைப் பண்ணு, இதைப் பண்ணு, அதை முடிச்சிட்டியா, இதை முடிச்சிட்டியான்னு நாள் பூரா ரிசல்ட் ஓரியன்டட்-ஆ மெசின் மாதிரியே மண்டை ஓடிட்டே இருக்கும். ராத்திரி தூக்கம் சொக்குனாலும், படுத்து பத்து நிமிசத்துக்கப்புறம் மூளை மட்டும் முழிச்சிக்கும். காலைல இருந்து நடந்ததை எல்லாம் நமக்கு ஞாபகப்படுத்தி, … Continue reading தூக்கமின்மை

Chef Deena’s Kitchen 👨🏾‍🍳

செஃப் தீனாவோட சமையல் ரெசிப்பீஸ் எல்லாமே நல்லா இருக்கு. கடந்த ஒரு வாரத்துல, ராகிப் புட்டு, பன்னீர் பெப்பர் மசாலா, செட்டிநாடு முட்டைக் குழம்பு, பீன்ஸ் பொரியல், பீட்ரூட் பொரியல் - இது எல்லாம் அவரோட சேனலைப் பாத்து தான் நான் செஞ்சேன். எல்லாமே அவ்ளோ அட்டகாசமா, செம சூப்பரா வந்தது. சாப்பிடவும் வித்தியாசமா இருந்தது. இனிமேல் நம்ம எது செஞ்சாலும், அவரோட சேனல் தான்னு முடிவு பண்ணிட்டேன். எப்போமே ஒன் பாட் குக்கிங், ஈஸி சமையல்னே … Continue reading Chef Deena’s Kitchen 👨🏾‍🍳