மனம் தூறுதே ❤️

ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு – இந்தப் பாட்டுல,

🎶மழை நின்று போனால் என்ன
மரம் தூறுதே..🎶

இப்படி ஒரு வரி வரும்.

இந்த வரிகளை நான் இத்தன நாளா, மழை நின்று போனால் என்ன, ‘மனம்’ தூறுதேன்னு நெனச்சிட்டு இருந்தேன்.

நல்லா மழை பெய்யுது. அதைப் பாத்துட்டே இருக்கும்போது, நம்மள சுத்தி இருக்குற நடக்குற எல்லாமே, எல்லாருமே, நல்லவங்களா நல்லவிதமாவே தெரிறாங்க. யாருமேலயும் எந்த வருத்தமும் இல்லாம, மனசு முழுக்க அன்பால மட்டுமே நெறைஞ்சி இருக்கு. ‘இடூஉ ஊங்கண் இனிய படூஉம்’-னு நற்றிணைல வரும். காண்கின்ற காட்சிகள் எல்லாமே இனிமையாவே தெரியிறது. அந்த மாதிரி ஓர் இனிமையான உணர்வு மனசு முழுக்க.

கொஞ்ச நேரத்துல மழை நின்னுடுச்சு. ஆனாலும் மனசுல தோணுன அந்த இனிமை, நல்லெண்ணம், அன்பு, இது எல்லாமே இன்னும் அப்படியே மனசுல தூறிட்டே தான் இருக்கு.

மழை நின்று போனால் என்ன
மனம் தூறுதே..

இந்த உணர்வை தான் பாடல் வரிகள் மூலமா, அருமையா சொல்லிருக்காங்கன்னு நான் இத்தன நாளா நெனச்சிட்டு இருந்தேன். ஆனா கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் தெரிய வந்தது, அது மனம் தூறுதே இல்ல, மரம் தூறுதேன்னு.

மழை நின்னதுக்கப்புறம் மரம் தூறுறது இயற்கை, லாஜிக்.

அந்தப் பாட்டுலயும், அது வேற மாதிரி அர்த்தத்துல வருதுங்கிறதும் எனக்கு இப்போ தான் புரிஞ்சது.

🎶முன்னம் ஒரு சொந்தம் வந்து
மழை ஆனதே..
மழை நின்று போனால் என்ன
மரம் தூறுதே.. 🎶

இறந்துபோன தன்னோட மனைவியைப் பத்தி சொல்ற மாதிரி வருதுன்னு நினைக்குறேன்.

ஆனா, அந்த ஒரே ஒரு வரியை மட்டும் தனியா எடுத்துப் பாக்கும்போது, மழை நின்று போனால் என்ன ‘மரம் தூறுதே’-வ விட ‘மனம் தூறுதே’ன்னு சொல்லும்போது, இன்னும் கொஞ்சம் நல்லா, மனசுக்கு இதமா இருக்குற மாதிரி ஓர் உணர்வு.

மழையை முழுசா ரசிச்சி முடிச்ச ஒரு மனதோட உணர்வை, ரொம்ப நுணுக்கமா கவனிச்சு, எழுதுன மாதிரி இருந்தது. ஆனா என்ன பண்றது, அப்படி எழுதலயே.

யோசிச்சுப் பாத்தா, சில சமயம் நம்ம தப்பா பாடுற பாடல் வரிகள் கூட நல்லா தான் வந்து அமைஞ்சிருதுல!

‘உண்மையான வரியைவிட நம்ம தப்பா பாடுன வரியே நல்லாத்தான் இருக்கு’ன்னு கொஞ்சம் சந்தோசமும் பட வைக்குது.

இதுல ஒரு ஆனந்தம்!

மழை நின்று போனால் என்ன
மரம் தூறுதே..
மனம் தூறுதே..

மரம், மனம் ரெண்டுமே தூறட்டுமே ❤️

– க. சுபா –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s