Only one more verse left to complete Natrinai. Feeling a bit emotional. நற்றிணை முடிய போகுதேன்னு கொஞ்சம் கவலையாவே இருக்கு. ஜூன் 2020ல SangamLit கேக்க ஆரம்பிச்சேன். இப்போ ரெண்டு வருசம் ஆகிடுச்சு. எப்படியோ ஆமை வேகத்துல நானூறு பாடல்களையும் கேட்டு முடிச்சிட்டேன்னு சந்தோசமா இருந்தாலும், ஐய்யயோ முடியப் போகுதேன்னு வருத்தமாவும் இருக்கு.
ஒரு புத்தகம் படிக்குற மாதிரி, தினமும் ஒரு கதை, ஒரு இயற்கை காட்சின்னு மனசை அப்படியே லேசா, சுகமா ஆகிட்டு போயிரும் ஒவ்வொரு பாடலும். நந்தினி கார்க்கியோட விவரணையும் அதுக்கு ஒரு மிக முக்கியக் காரணம். கடற்கரை, மலைப் பகுதி, வறண்ட பூமி-ன்னு எல்லா நிலப்பரப்புக்கும் நம்மளை அப்படியே கையைப் புடிச்சு கூட்டிட்டுப் போவாங்க அவங்க. அப்படி ஒரு எழுத்து நடை!
நற்றிணையையும் நந்தினி கார்க்கியையும் சேர்த்தே தான் தினமும் வியந்துட்டு இருப்பேன். இவ்ளோ பெரிய பொறுப்பை எடுத்துப் பண்றதுக்காக, அதையும் இவ்ளோ ரசனையோட பண்றதுக்காக உங்களுக்கு என்னோட பாராட்டுகளும் நன்றிகளும். Lots and lots of love ❤️
நற்றிணைல இத்தனை பாட்டுக் கேட்டுருந்தாலும், ஒரு பாட்டு கூட எனக்கு மனப்பாடமா தெரியாது. மனப்பாடம் பண்ணனும்னு நினைச்சதும் கிடையாது. ஆனா அதுல கிடைச்ச அனுபவம், என்னோட வாழ்க்கை மொத்தத்துக்கும் என்கூடவே இருக்கும்னு நம்புறேன்.
செங்காந்தள், பொன் வீ கொன்றை, புன்னை, நெய்தல் நிலப்பரப்பு, தீரா எதிரிகளான களிறு – வேங்கை, பசலையுறும் பெண்கள், அதைக் கொண்டு வரும் மாலைப்பொழுது, வாடைக்காற்று, வண்டு, மகரந்தத் துகள்கள், இன்னும் எத்தனை எத்தனையோ நிகழ்வுகளும் காட்சிகளும் நற்றிணையை நினைவுபடுத்திக்கிட்டே தான் இருக்கும்.
நற்றிணை முடிஞ்சதும் அடுத்து குறுந்தொகை கேக்கப் போறேன். அது எப்படி இருக்கப் போகுதுன்னு இன்னும் அதிக ஆர்வமாவே இருக்கு. பாப்போம் 😍
சங்க இலக்கியப் பயணம் வாழிய வாழியவே ❤️
– க. சுபா –

அங்க இங்க சுத்தி இப்போதான் இந்த “கிராமத்து பொண்ணு” ஐ கண்டுபிடித்துள்ளேன். உங்கள் பதிவுகள் அனைத்தும் சுவாரஸ்யமாக இருக்கும் போல உள்ளதே!!!.. ம்… ம்ம்.. வரும் நாட்களில் தொடர்ந்து வந்து படிக்கிறேன்…
https://www.scientificjudgment.com/
LikeLiked by 1 person
நன்றி 😍
LikeLike