தலைவனும் தலைவியும் காதலிக்குறாங்க. வீட்டுல ஒத்துக்கல. அதனால வீட்டை விட்டு ஓடிப் போயிறாங்க.
அந்தச் செய்தி தெரிய வந்ததும், தலைவியோட வளர்ப்புத் தாய் அவங்களைத் தேடிட்டுப் போறாங்க. கண்டே புடிக்க முடியல. அப்போ ஒருகட்டத்துல, அந்த வளர்ப்புத் தாய் சொல்றாங்க,
“நடந்து நடந்து காலே வலிக்குது. தேடி தேடிப் பாத்து, கண்ணு தன்னோட ஒளியை இழந்துடுச்சு. ராத்திரி வானத்துல இருக்குற நட்சத்திரங்களை விட, இந்த உலகத்துல மத்தவங்க தான் அதிகமா இருக்காங்க.”
தான் தேடிப் போற தலைவன் தலைவியைத் தவிர, மத்தவங்களையே பாத்து பாத்து, ஓர் ஏமாற்றத்துல இப்படிச் சொல்லிருக்காங்க.
‘இது அவங்களா இருக்குமோ..? இல்ல, இது அவங்களா இருக்குமோ..?’ன்னு எத்தனை பேரோட முகத்தைத் தேடி தேடிப் பாத்துருந்தா, இப்படி யோசிக்கத் தோணும்!
வானத்துல இருக்குற நட்சத்திரங்களை, தான் எதிர்கொள்ற மனுசங்க கூட ஒப்பிட்டுப் பாக்குறதே, ரொம்ப வித்தியாசமான, புதுமையான ஒரு சிந்தனையா இருக்கு. இதுக்காகவே, I love this poem ❤️
குறுந்தொகை பயங்கரமா போகுது. Loving it. Sangam Literarure for a reason ❣️
#SangamLit #NandiniKarky