நரை முடி

எனக்கு ரொம்ப வருசமாவே வெள்ளை முடி இருக்கு. ஆனா இப்போ கொஞ்ச நாளா, அது காது பக்கத்துலலாம் வெளில தெரிற மாதிரி ஆகிடுச்சு. வயசான-னால. ஒரு நாள் சபரிகிட்ட போய், "எனக்குப் பாரேன் வெள்ளை முடி நெறையா வந்துடுச்சு. இங்கலாம் எப்படித் தெரியுது பாரேன்"னு சோகமா காமிச்சிட்டு இருந்தேன். அதுக்கு சபரி, "எனக்கும் இங்க இருக்கு பாரு"ன்னு அவன் காது பக்கத்துல இருந்த வெள்ளை முடியைக் காமிச்சான். "வெளில தெரியிற மாதிரி வந்துடுச்சுல. அதனால எனக்கு இப்போ … Continue reading நரை முடி

Art of Delegation

எல்லா வீட்டு வேலையும் நம்மளே இழுத்துப்போட்டு செஞ்சா, physical work அதிகமா இருக்குற மாதிரி இருக்கு. யார்கிட்டயாச்சும் இனிமேல் இதை நீங்களே செய்யுங்க-ன்னு ஒப்படைச்சா, 'நம்மள மாதிரி அவங்க செய்ய மாட்டேங்கிறாங்க... சுத்தமாவே இல்ல. நேரத்துக்கு செய்யாம பொறுமையா செய்யுறாங்க'-ன்னு கோவமாவும், mental  complaints அதிகமாகவும் இருக்கு. என்ன பண்றதுனே புரியல... Need to learn the 'Art of Delegation in Household'. - க. சுபா -

முரண் – 2

அப்போ நான் என்னோட இயல்பான எடையை விட 12 கிலோ அதிகம் இருந்த நேரம். குழந்தை பிறந்து அஞ்சு மாசம் தான் ஆகுது. எங்க அண்ணி என்கிட்ட குழந்தையோட ஃபோட்டோ ஒன்னு அனுப்ப சொல்லிருந்தாங்க. நானும் அவனும் இருக்குற மாதிரி ஒரு ஃபோட்டோ அனுப்பிவிட்டேன். அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு போன் பண்ணாங்க. நல விசாரிப்பு எல்லாம் முடிஞ்சப்புறம், "ஃபோட்டோ நல்லா இருந்தது. நீயும் நல்லா கன்னம்லாம் வச்சு புஸ் புஸ்ன்னுஇருந்த." "ம்ம் ஆமா அண்ணி. கொஞ்ச … Continue reading முரண் – 2

மாதவிடாய் சுகாதாரம்

கொஞ்ச நாளைக்கு முன்னாடி எங்க சித்தி வீட்டுக்குப் போயிருந்தேன். போகும்போது அவங்களுக்கு அன்பளிப்பா ஒரு சேலையும் வாங்கிட்டுப் போனேன். ஒரு நாள் அதைக் கட்டியும் காமிச்சாங்க. நல்லா இருந்தது. அன்னைக்கு சாந்திரம், சித்தி ஏதோ வேலை பாத்துட்டு இருக்கும்போது, அந்தப் புதுச் சேலையில பின்பகுதி பூராம் ஏதோ அழுக்கா இருந்த மாதிரி எனக்குத் தெரிஞ்சது. "என்ன சித்தி இது?"ன்னு பக்கத்துல போய்ப் பாத்தா, பின் பக்கம் முழுக்க பீரியட்ஸ் கரை. கேட்டதுக்கு, "மூணாவது நாள் தான்"னு சொல்லி … Continue reading மாதவிடாய் சுகாதாரம்

ஒளிப்பூ தெளித்தாள்..

செவ்வாய்க்கிழமைகாலை எட்டு மணி. 'இந்த ஆஃபீஸ்-லாம் எவந்தான் கண்டுபுடிச்சானே தெரியல. கடுப்பா இருக்கு.' 🎶 பூ அவிழும் பொழுதில்..ஓராயிரம் கனா..ஓர் கனவின் வழியில்..அதே நிலா..பால் சிரிப்பால்.. 🎶 'இந்தப் பாட்டு எவ்ளோ சூப்பரா இருக்கு ! இத அப்டியே கேட்டுட்டே இருக்கலாம் போல. 'பேசாம அவரை மட்டும் ஆஃபீஸ் போகச் சொல்லிட்டு, நம்ம வீட்டுலயே இருந்துட்டா எவ்ளோ நல்லா இருக்கும்.' "ஏ.. சுந்தரி.. இந்தா உனக்கு தான் போன்-னு.." "எனக்கா.. யாரு இந்நேரத்துல எனக்கு போன் பண்றது." … Continue reading ஒளிப்பூ தெளித்தாள்..

அனுபவ விரும்பி

ஒரு கப் காஃபியோட ஆரம்பிக்கலாமா.. நீங்க காஃபிய எப்படி குடிப்பீங்க, result oriented-ஆ குடிப்பீங்களா இல்ல experience oriented-ஆ குடிப்பீங்களா? புரியலல.. செரி நான் இப்படிக் கேக்குறேன். நீங்க காஃபிய தலைவலி போகணும், சுறுசுறுப்பு ஆகணுங்கிறதுக்காக, கடகட-ன்னு குடிப்பீங்களா இல்ல, காஃபி குடிக்குறப்போ கெடைக்குற சந்தோசம், ஒரு அனுபவம் அதுக்காக ரசிச்சு ருசிச்சு மெள்ள பொறுமையா குடிப்பீங்களா ? Coffee is not my cup of tea-ன்னு சொல்றீங்களா.. செரி அப்போ நான் உங்களுக்காக இன்னொரு … Continue reading அனுபவ விரும்பி

Respect yourself, ladies !

A Woman: "I request all Hindus to send him a madisar." Her Kid: "ஏம்மா அவருக்கு மடிசார் அனுப்பணும் ?" "அது அவரை அசிங்கப்படுத்துறதுக்காக கண்ணு.." "மடிசார் அனுப்புனா எப்படிம்மா அசிங்கமாகும் ?" "அது பொண்ணுங்க கட்டுறதுல.. அதனால." "அதனால எப்டிம்மா அசிங்கம் ? எனக்குப் புரியவே இல்லையே !" "அதாவது, பொண்ணுங்க கட்டுற புடவைய ஆண்களைக் கட்டிக்க சொன்னா, அது அவங்களுக்கு அசிங்கம் தான.. அப்டி." "ஓ அப்போ நான் இனிமேல், … Continue reading Respect yourself, ladies !

தாலி சர்வே முடிவுகள்

இந்த 24 மணி நேரத்துல வந்துருக்குற கருத்தை மட்டும் வச்சி ரிசல்ட் போஸ்ட் பண்றேன். நான் இந்தச் சர்வே-வ ஒன்பதுலயிருந்து இன்னும் கொஞ்சம் சுருக்கி, மொத்தம் நாலு பிரிவா பாக்குறேன். முதல் பிரிவு: எந்த ஒரு சின்ன அசௌகரியமும் இல்லாம, தாலிய எப்போமே சந்தோஷமா கழுத்துல போடுறவங்க. (நம்பர் 1 இன் சர்வே) இவங்களோட ஓட்டு எண்ணிக்கை - 6 இரண்டாம் பிரிவு: இவங்களும் தாலிய எப்போமே கழுத்துல போடுறவங்க தான். ஆனா கொஞ்சம் அசௌகரியத்தோட போட்டுக்குறவங்க. … Continue reading தாலி சர்வே முடிவுகள்

தாலி சர்வே

திருமணமான பெண்களுக்காக 😊 திருமணமான ஆண்கள் அவங்களோட மனைவி சார்பாவும் vote பண்ணலாம். நம்பர் 1: யாரோட வற்புறுத்தலும் இல்லாம எனக்கே தாலி மேல நிறைய மரியாதை இருக்கு. அதனால நான் அத விரும்பி போட்டுக்குறேன். நம்பர் 2: தாலி மேல மரியாதை இருக்கு. போட்டுக்குறதுக்கும் விருப்பம் இருக்கு. இருந்தாலும் சில சமயங்கள்ல அசௌகரியமா இருக்கும்போதெல்லாம், பேசாம கொஞ்ச நேரம் கழட்டி வச்சிரலாமான்னு தோணும். நம்பர் 3: தாலி போட விருப்பம்லா கெடையாது. ஆனா வேற வழி … Continue reading தாலி சர்வே